எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, ஈரோட்டில் அதிமுகவினர் போராட்டம்..!

0 1073

மதுரை விமான நிலையத்தில் அமமுக நிர்வாகி தாக்கப்பட்ட விவகாரத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, ஈரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர் செங்கொட்டையன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்று அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் பேட்டியளித்த செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு சென்ற போது அரசு பாதுகாப்பு வழங்க தவறியதாக கண்டனம் தெரிவித்தார்.

இதே போல, திருப்பூர் ரயில் நிலையம் முன்பும், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments