தலைக்கவசம் அணியாமல் செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனம் ஓட்டிய பெண் காவலருக்கு ரூ.2000 அபராதம்..!
கன்னியாகுமரியில் தலைக்கவசம் அணியாமல் செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்ற பெண் காவலர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் அஜிதா என்ற பெண் காவலர் சீருடையில் தனது இரு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல், செல்போன் பேசியபடி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்ட நிலையில், பெண் காவலர் அஜிதா மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Comments