நாட்டின் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு வெகுவாக அதிகரிப்பு - பிரதமர் மோடி

நாட்டின் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு தற்போது வெகுவாக அதிகரித்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய காணொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், பல்வேறு துறைகளிலும் பெண்களின் ஆட்சி அதிகாரத் திறனும், முடிவெடுக்கும் திறனும் வெளிப்படுவதாகவும், இந்தியாவின் வளர்ச்சியை துரிதபடுத்துவதில் பெண் சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் தெரிவித்தார்.
கடந்த 9 ஆண்டுகளாக பெண் தலைமையிலான வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், ஜி20 மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய கருப்பொருட்களில், பெண் தலைமையிலான வளர்ச்சியும் ஒன்று என்றும் அவர் கூறினார்.
உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 6 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன்கள் அளிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
Comments