சர்வதேச மகளிர் தின விழா: பலூன்களை பறக்கவிட்டு மகளிர் தினத்தை கொண்டாடிய மாணவிகள்!

0 1134

சர்வதேச மகளிர் தினவிழாவை ஒட்டி, புதுச்சேரி கடற்கரையில் பெண்களின் உடல்நலத்தை பேணும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவிகள் பங்கேற்று நடைபயிற்சி மேற்கொண்டதோடு, வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற பலூன்களை வானில் பறக்கவிட்டு, மகளிர் தினத்தை கொண்டாடினர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பெண் அரசு ஊழியர்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பெண் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், பெண்களின் பெருமையை பறைச்சாற்றும் வகையில் வண்ண கோலமிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற மகளிர் தின பேரணியில், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், போலீஸ் போன்று பள்ளி மாணவிகள் வேடமணிந்து, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கயிறு இழுத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகளில் பெண் வழக்கறிஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments