திருடவந்த கோயிலில் அசந்து தூங்கிய போதை திருடர்கள்..!

தருமபுரி அருகே கோவில் பூட்டை உடைத்து புகுந்து திருடவந்த கொள்ளையர்கள் இருவர் மதுபோதையில் மெய்மறந்து தூங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
மான்காரன் கொட்டாய் கிரமத்திலுள்ள கோவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்ட கிராமத்தினர் போலீசாருக்கு தகவலளித்தனர். போலீசார் வந்து பார்த்தபோது 2 பேர் தூங்கி கொண்டிருப்பதை கண்டனர்.
இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கோவில் அருகேயுள்ள பள்ளி ஒன்றில் திருட வந்ததாகவும், நாய்கள் குரைத்ததால் அங்கிருந்து ஓட்டம் பிடித்து கோவிலுள்ளே நுழைந்ததாகவும், பின்னர் மதுபோதையில் தூங்கி விட்டதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து, இருவரும் வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளனரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments