மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட 15அடி ராட்சத ஆழ பள்ளத்தில் விழுந்து 5 பேர் காயம்..!
மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட 15அடி ராட்சத ஆழ பள்ளத்தில் விழுந்து 5 பேர் காயம்..!
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் மழை நீர் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட 15 அடி ஆழ பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அடுத்தடுத்து விழுந்ததில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
பாரிவாக்கம் சாலை சந்திப்பில் பூந்தமல்லி நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில் மழைநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்க ராட்சத பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
நேற்றிரவு 3 மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இந்த வழியாக சென்ற போது நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தனர்.
தகவல் அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments