டெல்லி மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றியது ஆம் ஆத்மி..!

0 1346

டெல்லி மாநகராட்சியின் முதல் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

3 மாநகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே மாநகராட்சியாக டெல்லி அறிவிக்கப்பட்டு கடந்தாண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது.

மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, மேயர் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 3 முறை வெளியிடப்பட்டு பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் ஷெல்லிஓபராயும், பாஜக சார்பில் ரேகாகுப்தாவும் போட்டியிட்டனர்.

இதில், ஆம் ஆத்மி 150 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அக்கட்சியினர் அறிவித்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments