மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம்.... வழிநெடுகிலும் கண்ணீரோடு பிரியா விடை கொடுத்த மக்கள்

0 2208

மாரடைப்பால் நேற்று உயிரிழந்த மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக இரண்டு நாட்களாக வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று காலையில் அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை செய்ததைத் தொடர்ந்து அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

சிவ பக்தரான மயில்சாமிக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிவனடியார்கள் கைலாய வாத்தியங்களில் சிவபுராணம் வாசித்தனர். பேண்டு இசைக்கலைஞர்கள் எம்ஜிஆரின் பாடலை இசைத்து அஞ்சலி செலுத்தினர்.

ரஜினி, பிரபு, விமல், லிங்குசாமி, தரணி உள்ளிட்ட திரைபிரபலங்கள், புகழேந்தி, விஜயபிரபாகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் இறுதி மரியாதை செலுத்தினர்.

வடபழனி ஏவிஎம் மின்மயானத்திற்கு சென்ற இறுதி ஊர்வலத்திற்கு பொதுமக்கள் வழிநெடுகிலும் நின்று கண்ணீருடன் மரியாதை செலுத்தி வழியனுப்பி வைத்தனர். மின்மயானத்தில் அவரது மகன்கள் இறுதிசடங்கு செய்த பின்னர் மயில்சாமி உடல் தகனம் செய்யப்படது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments