ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 75 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை..!

புழல் அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 75 சவரன் நகை 5 கிலோ வெள்ளி நகைகள் 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை புழல் அடுத்த ஆசிரியர் காலனி தெருவை சேர்ந்தவர் குணசேகரன் இவர் டெல்லியில் உள்ள மத்திய அரசு அமைச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இந்தநிலையில் குடும்பத்துடன் உறவினரின் சுப நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது ,வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் உள்ள தங்க நகைகள் 75 சவரன் 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2 லட்சம் ரூபாய் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்...
Comments