லிவிங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்த நர்ஸ் கொலை.. ரயிலில் தப்பியவரை மடக்கிப் பிடித்து கைது செய்த போலீசார்!

மும்பையில் ஒரே வீட்டில் லைவ் இன் பார்ட்னராக தங்கியிருந்த 37 வயது நர்சை கொலை செய்து அவரது உடலை படுக்கை அறையில் மறைத்து வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிராவின் பல்ஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்திக் ஷா எந்த வேலைக்கும் செல்லாததோடு, தன்னோடு 3 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்த மேகா என்பவருடன் கடந்த 6 மாதமாக ஒரே வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், ஹர்திக்கும் மேகாவும் சண்டையிட்டுக் கொள்வதாக அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்காக வீட்டிற்குச் சென்ற போலீசார், கொலை செய்யப்பட்ட நிலையில் மேகாவை மீட்டனர்.
வீட்டிலுள்ள சில பொருட்களை விற்று விட்டு அந்த பணத்துடன் ரயிலில் தப்பிய ஹர்திக்கை போலீசார் அளித்த தகவலின் பேரில் மத்திய பிரதேசம் நகடாவில் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
Comments