கால்நடைகள் கொண்டு சென்ற கப்பலில் 11 கோடியே 40 லட்சம் டாலர் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்..!

ஸ்பெயினில் கால்நடைகளை ஏற்றிவந்த கப்பலில் இருந்து 11 கோடியே 40 லட்சம் டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
கேனரி தீவுகளுக்கு அப்பால் கால்நடை கப்பலை சோதனை செய்த ஸ்பெயின் போலீசார், அதிலிருந்த நான்கரை டன் கோக்கைனை பறிமுதல் செய்தனர்.
அந்த கப்பல் பத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள துறைமுகங்களுக்கு சென்று வந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கால்நடைகள் கொண்டு செல்லும் கப்பல்களை கடத்தலுக்கு பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments