ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள்..!

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் இயற்கை சூழலுடன் ஒன்றியிருக்கும் பறவைகளை கண்டு ரசித்தனர்.
வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து 26 வகையான பறவைகள் ஆண்டுதோறும் வருகை தரும்.
இந்த ஆண்டு வேடந்தாங்கல் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், ஊசிவால் வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன.
Comments