தாயின் ஆசையை நிறைவற்றி வரும் மகன்.. இருசக்கர வாகனத்தில் இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம்..!

0 2315

தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தனது தாயரை இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மைசூர் போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர், தனது தந்தையின் மரணத்துக்குப் பிறகு கடந்த 2018 -ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து தமது  தாயாருடன் இந்தியா முழுவதும் உள்ள கோயில்கள்,மடங்கள், ஆசிரமங்களுக்கு ஆன்மீகப் பயணம் செய்து வருகிறார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு மாடலுடைய பழைய இருசக்கர வாகனத்தில் தன் தாயாரை பின்புறம் அமர்த்திக்கொண்டு இதுவரை இந்தியாவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு சென்றுள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் தரிசனம் செய்த கிருஷ்ணகுமார்,இந்தியா முழுவதும் உள்ள கோயில்களுக்கு அழைத்து செல்வேன் என தாய்க்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வருவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments