திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில், 6.40 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு 'கின்னஸ்' சாதனை..!

0 1544

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், 4 மணி நேரத்தில் 6 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.

முதலமைச்சரின் பசுமை புரட்சி திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, சக்கரபாணி, மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

கடந்த 3 மாதங்களாக, வெங்கட நாத பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக இடையகோட்டையிலுள்ள 117 ஏக்கர் நிலத்திலிருந்த சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்றுவந்தன.

இன்று, இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என 16 ஆயிரத்து 500 பேரால் அங்கு 6 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகளை நடப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments