அமெரிக்காவில் தஞ்சமடைவதற்காக கடுங்குளிருக்கு மத்தியில் மெக்சிகோ எல்லையில் காத்திருக்கும் அகதிகள்

0 1251

அமெரிக்காவில் தஞ்சமடைவதற்காக கடும் குளிருக்கு மத்தியில் மெக்சிகோ எல்லையில் அகதிகள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

தங்களது அவல நிலைக்கு, கிறிஸ்துமஸ் காலம் முற்றுப்புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கையில், அவர்கள் போர்வைகளுடன் குடும்பமாக காத்துக்கிடக்கின்றனர்.

டிசம்பர் 21-ம் தேதிக்கு பிறகு அமெரிக்காவிற்கு செல்வது, எளிதாக இருக்கும் என அவர்கள் நம்பிய நிலையில், அகதிகளை நாட்டிற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பும் கொள்கையை, இம்மாதம் 27-ம் தேதி வரை தற்காலிகமாக தொடர, அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments