அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெற அடையாள ஆவணமாக ஆதார் எண் வழங்க வேண்டும் - தமிழ்நாடு அரசு..!

அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அரசிதழில், ஆதார் எண் இல்லாதோர், அந்த எண்ணை பெறும்வரை மற்ற ஆவணங்கள் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
( கருவூலங்கள் மற்றும் கணக்கு துறை, பயன்களை பெறுவோரின் ஆதார் தகவல்களை உறுதி செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.) அண்மையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
Comments