தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.22 கோடி மோசடி.. தலைமறைவான உரிமையாளர்

0 2655

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி 22 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து தலைமறைவாக உள்ள நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

வந்தவாசியில் சம்சு மொய்தீன் என்பவர்  வி.ஆர்.எஸ் எனும் தனியார் நிதி நிறுவனம்  நடத்தி வருகிறார். மேலும் இவர் தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு நடத்தி வந்தவாசி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் வசூல் செய்து பொருட்களை தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

மேலும் நிதி நிறுவனத்திலும் 22கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த தாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சம்சுமொய்தீனை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments