இந்தியாவின் 50 நகரங்களில் 5 ஜி சேவை செயல்பாடு தொடக்கம் - மத்திய அரசு அறிவுப்பு..!

0 1806

இந்தியாவின் 50 நகரங்களில், 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 26-ம் தேதி நிலவரப்படி, 13 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 5 ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக, மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக குஜராத்தில் 33 நகரங்களிலும், மகாராஷ்டிராவில் மூன்று நகரங்களிலும், மேற்குவங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா இரு நகரங்களிலும் 5 ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்தில் சென்னையிலும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்பட 9 மாநிலங்களிலும், டெல்லி யூனியன் பிரதேசத்திலும் 5 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments