உலக நாடுகளுக்கு இந்தியா உதவிக்கரம் - பிரதமர் மோடி பெருமிதம்

பிற நாடுகளிடம் இருந்து உதவி கோருவதற்கு பதில், உலக நாடுகளுக்கே உதவிக்கரம் நீட்டும் நிலைக்கு இந்தியா உயர்ந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இரண்டாம் கட்டமாக 93 இடங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையொட்டி, அகமதாபாதில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 10 கிலோ மீட்டர் தூரம் பேரணியாகச் சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் திரளான பொதுமக்களும், பா.ஜ.க.வினரும் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பிற நாடுகளிடம் இருந்து உதவி கோருவதற்கு பதில், உலக நாடுகளுக்கே உதவிக்கரம் நீட்டும் நிலைக்கு இந்தியா உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஒட்டு மொத்த உலகத்தின் பார்வையும் இந்தியா மீதும், இந்தியாவின் பலத்தின் மீதும் திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார். காங்கிரஸ் தமது குடும்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் நிலையில், தேச நலனை மட்டுமே பா.ஜ.க. முதன்மையாக கருதுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
குஜராத் தேர்தலையொட்டி 31 பொதுக்கூட்டங்களில் பேசிய மோடி, நேற்றுடன் தமது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
Comments