5 பைசா நாணயம் இருந்தால் வயிறார முழு சாப்பாடு.. 35 வகை பதார்த்தங்களுடன் வாரத்தில் ஒருநாள் வழங்கும் உணவகம்..!

0 1645
5 பைசா நாணயம் இருந்தால் வயிறார முழு சாப்பாடு.. 35 வகை பதார்த்தங்களுடன் வாரத்தில் ஒருநாள் வழங்கும் உணவகம்..!

ஆந்திரமாநிலம் விஜயவாடாவில் உள்ள ராஜ் போக் உணவகம் 5 பைசா நாணயத்துக்கு முழு சாப்பாடு வழங்கி வருகிறது.

கிடைப்பதற்கு அரிதாக புழக்கத்தில் இருந்து மறைந்து போன 5 பைசா நாணயம் வைத்திருப்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் இந்த உணவகத்துக்குச் சென்று வயிறார உணவு உண்டுவரலாம்.

35 வகையான கூட்டு காய்கறி குழம்பு வகைகளுடன் முழுமையான வட இந்திய உணவுத் தட்டு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில் இந்த உணவகத்தில் கூட்டம் அலைமோதுகிறது. 400 ரூபாய் மதிப்புடைய உணவுத் தட்டை விளம்பரப்படுத்த இந்த உத்தியைக் கையாள்வதாக உணவக உரிமையாளர் தீப்தி தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments