கால்பந்து மைதானத்தில் குப்பைகளை அகற்றிய ஜப்பான் ரசிகர்கள்..!

0 1421

கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை காண சென்றுள்ள ஜப்பான் ரசிகர்கள், போட்டிகள் நிறைவடைந்தவுடன், மைதானத்திலுள்ள குப்பைகளை அகற்றி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.

வியாழனன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இந்த போட்டி முடிந்தவுடன், ஊதா நிற பைகளுடன் மைதானத்தில் வலம் வந்த ஜப்பான் ரசிகர்கள், காலரிகளில் இருந்த குப்பைகளை அகற்றினர்.

சிறுவயது முதலே ஜப்பானியர்களுக்கு சுத்தம் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டதாக, அவர்கள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments