பெருகி வரும் குற்றச் செயல்கள் - வாடகைக்கு தங்கும் வெளிமாநிலத்தவர்களின் விவரங்களை ஆய்வு செய்ய சென்னை காவல்துறை அறிவுறுத்தல்

வடமாநிலத்தவர்களுக்கு வேலை வழங்குவோர் அவர்களது ஆதார் விவரங்களை பெற்று அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு தெரிவிக்க சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 424 வெளி மாநிலத்தவர்களும், 96 வெளிநாட்டவர்களும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள சென்னை காவல்துறை, பெருகி வரும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் வாடகைக்கு தங்கும் போது அவர்களது விவரங்களை காவல்துறையினர் அடிக்கடி ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளது.
Comments