மெரினாவில் காதலர்களை செல்போனில் படம் பிடித்து லட்சங்களை பறித்த போலி..! கடற்கரை காதலுக்கு கண்ணிவெடி

0 2523

சென்னை மெரீனா கடற்கரைக்கு அலுவலக ஆண் நண்பருடன் சென்ற திருமணமான பெண்ணை செல்போனில் புகைப்படம் எடுத்து, மிரட்டி 2 லட்ச ரூபாய் பறித்த போலி போலீஸ் அதிகாரி ஒரிஜினல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஆசியாவிலேயே மிக நீண்ட கடற்கரை என்ற பெருமைக்குரிய சென்னை மெரீனா கடற்கரை காதலர்களின் சொர்க்கபுரி..! வெயில் அடித்தாலும், மழை அடித்தாலும் கடற்கரை மணலில் அமர்ந்து கவிதை பாடும் ஜோடிகளின் சேட்டைகள் குடும்பங்களுடன் வருவோரை முகம் சுழிக்க வைக்கும்

 

அந்தவகையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வரும் 35 வயது பெண் ஒருவர், அலுவலகத்தில் தன்னோடு பணியாற்றும் சக ஊழியரோடு மெரினா கடற்கரைக்கு வந்திருக்கிறார். இருவரும் கடற்கரை மணலில் நெருக்கமாக அமர்ந்திருந்தபோது, போலீஸ் சீருடையில் வந்த நபர் அவர்களை செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

தன்னை, அசிஸ்டண்ட் கமிஷனர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர், அந்தப்பெண்ணிடம் விசாரித்துள்ளார் அந்தப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்ததையடுத்து. அப்பெண்ணின் திருமணம் தாண்டிய உறவை வீட்டில் கூறிவிடுவதாக மிரட்டி, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாகச் சிறுக சிறுக கூகுள் பே மூலம் 2 லட்ச ரூபாய் வரை பறித்ததாக கூறப்படுகிறது.

அந்த பணம் போதாது என்றும் மொத்தமாக 2 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பணம்கேட்டு மிரட்டியதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் மெரீனா போலீசில் புகாரளித்தார்.

இதையடுத்து அந்த நபரை பணம் தருவதாக கூறி தி.நகர் பேருந்து நிலையம் வரவழைத்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அந்த போலி போலீஸ் அதிகாரி மணலியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பதும் துறைமுகத்தில் ஒப்பந்த பணியாளராக உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

சதீஷ்குமார் இது போன்ற வேறு எத்தனை ஜோடிகளிடம் மிரட்டி பணம் பறித்து வருகிறார் என்பது குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments