8 மாதத்தில் 6 ஆண்டு காதல்..! கசந்த தனிக்குடித்தனம் வர மறுத்த 6 மாத கர்ப்பிணி மனைவிக்கு வெட்டு, தடுக்க வந்த மாமியாரையும் வெட்டிய மாப்பிள்ளை..!

0 2451

குடும்பம் நடத்த வர மறுத்த 6 மாத கர்ப்பிணி மனைவியை கத்தியால் வெட்டியதோடு தடுக்க வந்த மாமியாரையும் வெட்டிய மாப்பிள்ளை கால் முறிந்த நிலையில் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை அயனாவரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராகேஷ் அதேப்பகுதியைச் சேர்ந்த டெபோராவை 6 ஆண்டுகளாக காதலித்து 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு வரதட்சணை கேட்டு வந்ததால் தாய் வீட்டிற்குச் சென்ற டெபோராவை தனது வீட்டிற்குச் செல்லலாம் என்று அழைத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த மனைவியை கத்தியால் வெட்டியதோடு தடுத்த மாமியார் ஸ்டெல்லா மேரியையும் வெட்டி விட்டு தப்பியோடினார்.

பலத்த காயமடைந்த 2 பேரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்த அயனாவரம் போலீஸார், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ராகேஷ் ஸ்டான்லி மருத்துவமனையில் இருப்பதாக கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments