'பிஸ்லெரி' நிறுவனத்தை ரூ.7,000 கோடிக்கு வாங்கும் 'டாடா' நிறுவனம் - 'பிஸ்லெரி' தலைவர் செளஹான்

0 1498

பிரபல பிஸ்லெரி நிறுவனத்தை, 7,000 கோடி ரூபாய்க்கு, டாடா குழுமம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

82 வயதாகும் பிஸ்லெரி நிறுவனத் தலைவர் செளஹான், தனக்குப்பின் நிறுவனத்தை வழிநடத்த மகளுக்கு விருப்பமில்லாததால், விற்க முடிவெடுத்துள்ளார்.

ரிலையன்ஸ், நெஸ்ட்லே உள்ளிட்ட பல நிறுவனங்கள் முன்வந்த நிலையில், டாடா நிறுவனத்தின் தொழில் நெறிமுறைகள் பிடித்துபோய், 2 ஆண்டுகள் பேச்சுவார்த்தைக்குப் பின், டாடா கன்சியூமரிடம் பிஸ்லெரி-யை விற்பனை செய்ய செளஹான் முன்வந்துள்ளார்.

ஏற்கனவே, மினரல் வாட்டர் விற்பனையில் ஈடுபட்டுள்ள டாடா நிறுவனம், 122 வாட்டர் பிளாண்ட்களை உடைய பிஸ்லெரியை வாங்குவதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய பேக்கேஜ் வாட்டர் நிறுவனமாக மாறும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments