மதுபோதையில் ஏற்பட்ட தகாரறு காரணமாக நண்பரை கடத்தி கொலை செய்து ஆற்றில் வீசிய 4 பேர் கைது..!

திருச்சியில் மதுபோதையில் ஏற்பட்ட தகாரறு காரணமாக நண்பரை கடத்தி கொலை செய்து ஆற்றில் வீசிய 4 பேர் கைது.
செய்யப்பட்டனர். திருச்சி, கீழரண் சாலையைச் சேர்ந்த நாகூர் என்கிற நாகூர் மீரான் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சகோதரியுடன் பேசிக் கொண்டு இருந்த போது கடத்தப்பட்டார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் நாகூர் மீரானின் 4நண்பர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் மது அருந்தும் போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் சக்திவேல் என்பவரை நாகூர்மீரான் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் 4பேரும் சேர்ந்து நாகூர்மீரானை கடத்தி , கை, கால்களை வெட்டி கொலை செய்து காவிரி ஆற்றில் வீசியது தெரிய வந்தது.
Comments