சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
துணி காய வைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!

திருநின்றவூர் அருகே மொட்டைமாடியில் கொடிக்கம்பியில் துணி காயவைக்கும்போது, மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார். பள்ளக்கழனி பாலமுருகன் நகர் பகுதியை சேர்ந்த சத்தியாவின் மனைவி மேகலா.
கொடிக்கம்பம், மின்சார ஒயரில் உரசிக்கொண்டிருப்பதை அறியாமல், இவர் துணி காய வைத்தபோது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
மேகலாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக உடனே 108 ஆம்புலன்ஸை வரவழைத்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேகலா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Comments