10 முறை குளிர்பானம் மூலமாக கொல்ல முயற்சித்தேன்... முடியாததால் தான் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தேன் - காதலனை கொன்ற காதலி வாக்குமூலம்

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவன் கொலை வழக்கில், தொடர்ந்து 10 முறை காய்ச்சலுக்கு எடுத்து கொள்ளும் மாத்திரைகளை குளிர்பானத்தில் அளவுக்கு அதிகமாக கலந்து கொடுத்து காதலி கொலை செய்ய முயன்றது, விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கல்லூரி மாணவன் சாரோன் ராஜுக்கு, கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து, கொலை செய்தது உறுதியானதையடுத்து, காதலி கிரிஷ்மா, அவரது தாய் மற்றும் மாமா கைது செய்யப்பட்டனர்.
கிரிஷ்மாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருவிதாங்கோடு பகுதியில் உள்ள ஒரு மருந்தகத்தில் காய்ச்சல் மாத்திரைகள் வாங்கி, 2 மாதங்களில், சி.எஸ்.ஐ மருத்துவமனை, கல்லூரி மற்றும் சொகுசு விடுதிகளுக்கு சாரோன் ராஜை அழைத்து சென்று சுமார் 10 முறை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றதாகவும், 10 முறையும் சாரோன் ராஜ் பாதிப்பின்றி தப்பித்ததால் வீட்டிற்கு அழைத்து சென்று கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சாரோனை கொலை செய்ய பயன்படுத்திய விஷ பாட்டில்கள் க்ரீஷ்மாவின் வீட்டின் பின்புறத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
Comments