பெற்ற தாயை அடித்துக்கொன்று வீட்டின் பின்பக்கம் புதைத்த கொடூர மகன் கைது..!

0 2287

விழுப்புரம் மாவட்டம் சித்தாமூர் கிராமத்தில், பணம் தர மறுத்ததால் பெற்ற தாயை அடித்துக்கொலை செய்து, வீட்டின் பின்பக்கம் புதைத்த மகனை போலீசார் கைது செய்தனர்.

அசோதை என்பவரது மகன் சக்திவேல், மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், அவரது மனைவி பிள்ளைகளுடன் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தாயுடன் வசித்து வந்த சக்திவேல், நேற்றிரவு தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சக்திவேல் தாக்கியதில், தாய் உயிரிழந்துள்ளார்.

கொலையை மறைப்பதற்காக இரவோடு இரவாக வீட்டின் கழிவறைக்கு அருகே தாயின் உடலை புதைத்துவிட்டு, வீட்டுக்குள்ளேயே சக்திவேல் பதுங்கி இருந்த நிலையில், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வந்த போலீசார், புதைக்கப்பட்ட தாயின் சடலத்தை தோண்டி எடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments