அடிபம்பை அகற்றாமல் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்.. கிருஷ்ணகிரியில் சம்பவம்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே, அடிபம்பை நீக்காமல் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
கோடிபதி பள்ளத்துகொட்டாய் பகுதியில், தண்ணீர் தட்டுப்பாடு நேரங்களில் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த அடிபம்பு, பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அடிபம்பை நீக்காமல் கழிவு நீர் கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் குறித்து, வட்டார அலுவலரிடம் விசாரித்தபோது, அது குறித்து தனக்கு தெரியவில்லை எனவும் ஃபைல் பார்த்துவிட்டு கூறுவதாக பதில் அளித்தார்.
Comments