மதுபோதையில் தள்ளாடியபடி சாலையில் நடந்தவர் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு..!

0 2936

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுபோதையில் தடுமாறி விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்த காட்சி சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளது.

பெரிய கடை வீதியில் முதியவர் ஒருவர் மதுபோதையில் சாலையில் தள்ளாடியபடியே நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது சாலையோரம் நின்ற அவர் திடீரென தடுமாறி கீழே விழுந்தபோது, அவ்வழியே வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. 

இதில், அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments