பெங்களூரு விமான நிலையம் வந்த உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்

0 7037

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமாக கருதப்படும் ஏர்பஸ் ஏ380 விமானம், கர்நாடக மாநிலம் பெங்களூர் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு முதல்முறையாக வந்தது .

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், பெங்களூரு - துபாய் இடையே விமானப் போக்குவரத்தை முதல்முறையாக தொடங்கியது. இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ380 விமானம், 224 பயணிகளுடன் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்தது.

இதையடுத்து பெங்களூருவில் இருந்து துபாயுக்கு பயணிகளை அந்த விமானம் ஏற்றிச் சென்றது. ஏர்பஸ் ஏ 380 விமானம் 2 அடுக்கு கொண்டது.

அதில் 500-க்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ளன. எகானமி, பிசினஸ் மற்றும் முதல் வகுப்பு வசதி உள்ளது. முதல் வகுப்பில் தனி அறைகள், குளியல் அறைகள் போன்ற வசதிகள் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments