ஆவின் பால் பாக்கெட்டுக்குள் மிதக்கும் ஈ.. வெளியான வீடியோ..!
ஆவின் பால் பாக்கெட்டுக்குள் மிதக்கும் ஈ.. வெளியான வீடியோ..!
மதுரையில் ஆவின் பால் பாக்கெட்டுக்குள் ஈ கிடந்தது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள ஆவின் டெப்போவில் இருந்து ஒருவர் பச்சை நிற பால் பாக்கெட் வாங்கியுள்ளார்.
பின்னர் வீட்டுக்கு சென்று பாக்கெட்டை பார்த்தபோது, ஈ ஒன்று கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாக்கெட்டை திறக்காமல், வீடியோ வெளியிட்டு அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த பால்பாக்கெட்டை திரும்ப பெற்ற ஆவின் அதிகாரிகள், பேக்கிங் செய்யும் போது தவறு நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Comments