சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
தண்ணீர் அருந்த வந்தபோது சேற்றில் சிக்கிய யானைகள்.. வன அலுவலர்கள், தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு!

கென்யாவில் சேற்றில் சிக்கிய இரண்டு பெண் யானைகள் மீட்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குளத்தின் நடுவில் இருந்த தண்ணீரை அருந்த வந்த இரண்டு பெண் யானைகளும் தண்ணீரைச் சுற்றியிருந்த கடினமான களிமண்ணில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடின.
இதுகுறித்து தகவல் அறிந்த கென்ய வனவிலங்கு பாதுகாவலர் குழு, வனவிலங்கு அறக்கட்டளையைச் சேர்ந்த தன்னார்வலர்களின் நீண்ட நேர முயற்சிக்குப் பின் இரண்டு யானைகளும் காப்பாற்றப்பட்டன.
சேற்றிலிருந்து விடுவிக்கப்பட்டதும் இரண்டு யானைகளும் விட்டால் போதும் என்று காட்டிற்குள் ஓட்டம் பிடித்தன.
Comments