நைஜீரியாவில் லாரியும், பேருந்துகளும் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிக்கி 19 பேர் பலி

0 1254
நைஜீரியாவில் லாரியும், பேருந்துகளும் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிக்கி 19 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் லாரியும், பேருந்துகளும் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகினர்.

தலைநகர் அபுஜாவில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்த முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர்திசையில் வந்த லாரியின் மீது பலமாக மோதியது.

அடுத்த சில நொடிகளில் பின்னால் வந்த மற்றொரு பேருந்தும் லாரி மீது மோதி, 3 வாகனங்களும் தீயில் கருகி உருக்குலைந்து போயின. இந்த கோர விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த நிலையில், 18 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments