பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு அளித்து முகநூலில் தவறாக சித்தரித்த சில்வண்டு கைது

0 2237

சென்னையில், பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு அளித்ததுடன், அவரது செல்போன் எண்ணை தவறாக சித்தரித்து முகநூலில் பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சுயதொழில் செய்து வரும் பெண்ணை, கடந்த ஆகஸ்டு 22-ஆம் தேதி செல்போனில் தொடர்புகொண்ட மர்மநபர் ஒருவர், அவரிடம் ஆபாசமாக பேசியும், குறுஞ்செய்தி மற்றும் வீடியோ அனுப்பியும் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படும் நிலையில், புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், பாதிக்கப்பட்ட பெண் வசிக்கும் அதே தெருவில் உள்ள ராஜேஷ் என்பவர், அப்பெண்ணுடன் முகநூலில் பேச முயற்சித்ததாகவும், அதனால் அப்பெண்ணின் கணவர் ராஜேஷை கண்டித்ததாகவும் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர், பெண்ணுக்கு தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இந்நிலையில், தலைமறைவான ராஜேஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரது மனைவியை வைத்து பேசி ராஜேஷை நேரில் வரவழைத்து கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments