ஓணம் பண்டிகையை கொண்டாடி விட்டு 4 பேருடன் வந்த கார் கிணற்றில் விழுந்து விபத்து - 3 பேர் பலி!

0 2520

ஓணம் பண்டிகை கொண்டாடி விட்டு 4 கல்லூரி மாணவர்கள் வந்த கார், கோவை அருகே சாலையோர தோட்டத்தில் இருந்த கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த ரோஷன் என்பவர், தனது நண்பர்களுடன் நேற்று சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு அதிகாலையில் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கூகுள் மேப்பை பார்த்தப்படி தென்னமநல்லூர் பகுதியில் அவர்கள் சென்றபோது, சாலையில் இடதுபுறமாக திருப்புவதற்கு பதில் வலதுபுறமாக வேகமாக திரும்பியதாக கூறப்படுகிறது.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த தோட்டத்திற்குள் இரும்பு கேட்டை உடைத்து கொண்டு சுமார் 120 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்தது.

காரை ஓட்டி வந்த இளைஞர் கதவை திறந்து வெளியே குதித்து உயிர்தப்பிய நிலையில், எஞ்சியவர்கள் காருடன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கார் ஓட்டிய நபருக்கு 18 வயதாகும் நிலையில், அவரிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளதா என விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments