முன்சக்கரத்தை தூக்கியவாறு ஒரே சக்கரத்தில் பைக்கை ஓட்டி நள்ளிரவில் ஸ்டண்ட்.. இளைஞர்களை தேடும் போலீசார்!

0 1845

சென்னையில் காவல்துறை எச்சரிக்கையை மீறி நள்ளிரவில் அண்ணா சாலையில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

தேனாம்பேட்டையில் இருந்து ஜெமினி மேம்பாலம் செல்லும் அண்ணா சாலையில் இளைஞர்கள், பைக்கின் முன் சக்கரத்தை தூக்கியவாறு ஒரே சக்கரத்தில் பைக்கை ஓட்டி ஸ்டண்ட் செய்துள்ளனர்.

பொதுமக்களுக்கு இடையூறாக சாகசகத்தில் ஈடுபட்ட இளைஞர்களை, வாகன பதிவெண்களைக் கொண்டு பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே, பைக் ரேஸ் மற்றும் வீலிங் போன்ற சாகசங்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments