ரூ.10 நாணயங்களை சாக்கு பைகளில் கட்டி எடுத்து வந்து பைக் வாங்கி சென்ற இளைஞர்!

0 3159

ஓசூரில் 10 ரூபாய் நாணயங்களை சாக்கு பைகளில் கட்டி எடுத்து வந்து புதிய டிவிஎஸ் அப்பாச்சி பைக்கை இளைஞர் ஒருவர் வாங்கிச் சென்றார்.

பத்து ரூபாய் நாணயத்தை சில இடங்களில் கடைக்காரர்கள் வாங்காமல் மறுத்து விடுவதால், அது செல்லுமா என்று அச்சம் மக்களிடையே நிலவுகிறது.

ஆதலால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், கெலமங்கலத்தை சேர்ந்த ராஜீவ் என்பவர், 3 ஆண்டுகளாக 10 ரூபாய் நாணயங்களை வாங்கி சேகரித்தார்.

பின்னர் பைக்குக்கு 2 தவணையாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நாணயங்களையும், மீதியை பணமாகவும் காரில் எடுத்து வந்து அவர் கொடுத்தார். நாணயங்களை ஊழியர்கள் எண்ணி முடிக்க 2 மணி நேரம் ஆனது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments