சிலிண்டர்கள் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து.. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பரபரப்பு

ஆந்திரா அருகே சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள், அருகில் இருந்த கிராம மக்கள் கடும் அச்சமடைந்தனர்.
லாரியில் தீ பற்றியவுடன் டிரைவர் லாரியிலிருந்து குதித்து தப்பியுள்ளார். சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட பயங்கர சத்தம் 3 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டதாக கூறப்படுகிறது.
Comments