தொட்டபெட்டா மலை உச்சியில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை

0 4305

நீலகிரி மாவட்டம் உதகை அருகே தொட்டபெட்டாவில், மலை உச்சியில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை செய்துக்கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொட்டபெட்டா காட்சி முனையில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது தடுப்புகளை தாண்டி மலை உச்சிக்கு சென்ற ஒரு பெண், திடீரென கீழே குதித்துள்ளார்.

இதனை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் சிலர் வீடியோ பதிவு செய்த நிலையில், தகவல் அறிந்து வந்த உதகை வனத்துறையினர், காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் 350 அடி பள்ளத்தாக்கில் இருந்து அப்பெண்ணை சடலமாக மீட்டனர். விசாரணையில் உயிரிழந்தது கோவையை சேர்ந்த 63 வயதான மூதாட்டி லீலாவதி என்பது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments