திருச்சி மத்திய சிறையில் வெளிநாட்டு சிறைவாசிகள் போராட்டம்.. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை திருப்பித் தரக் கோரிக்கை..!

0 2870
திருச்சி மத்திய சிறையில் வெளிநாட்டு சிறைவாசிகள் போராட்டம்.. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை திருப்பித் தரக் கோரிக்கை..!

திருச்சி மத்திய சிறையில் இயங்கிவரும் வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை  திருப்பித் தரக் கோரி சிறைவாசிகள் மரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினர்.

உரிய ஆவணங்களின்றி இந்தியாவில் தங்கியிருத்தல், போதை பொருள் கடத்தல் உள்பட பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய இலங்கை, நைஜீரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த 143 கைதிகள் அடைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு முகாமில் 2 நாட்களுக்கு முன் சோதனையிட்ட போலீசார் 143 செல்போன்கள், 3 லேப்டாப்புகளை பறிமுதல் செய்தனர்.

அவற்றை திருப்பித் தரக்கோரிய சிறைவாசிகள் அங்கிருந்த புளிய மரத்தின் உச்சியில் பாதாகைகளுடன் ஏறி முழக்கங்களை எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments