பிரான்ஸில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.5.50 லட்சம் மோசடி.. நைஜீரிய நாட்டவர் கைது..!

0 2078
பிரான்ஸில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.5.50 லட்சம் மோசடி.. நைஜீரிய நாட்டவர் கைது..!

புதுச்சேரியைச் சேர்ந்த பெண்ணிடம் பிரான்ஸில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ஐந்தரை லட்ச ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேஸ்லின் மரியோ என்ற அந்தப் பட்டதாரி பெண், வெளிநாட்டில் வேலை தேடி சில வேலைவாய்ப்பு இணையதளங்களில் பதிவிட்டிருந்ததாகத் தெரிகிறது.

அந்த பெண்ணை செல்போனில் தொடர்புகொண்ட நபர் பிரான்ஸில் வேலை வாங்கி தருவதாகக் கூறி அதற்கு கட்டணமாக பல்வேறு தவணைகளாக 5 லட்சத்து 50,000 ரூபாய் வரை வசூலித்துள்ளார்.

ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜேஸ்லின் மரியா, சைபர் கிரைம் போலீஸில் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு-வில் பதுங்கியிருந்த தைலோ அத்வாலா என்ற நைஜீரிய நாட்டவரை போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments