கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலை சினிமா பாணியில் துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்த மருத்துவமனை ஊழியர்கள்..!

0 3136

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 6-ஆம் தேதி சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை துரத்திச் சென்ற மருத்துவமனை காவலாளிகள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

அந்நபர் ஆந்திராவைச் சேர்ந்த கண்ணம்ம நாயுடு என்பதும், ஆந்திராவில் இருந்து ரயில் மூலமாக கஞ்சா கடத்தி வந்து மருத்துவமனை வளாகத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராயபுரத்தைச் சேர்ந்த தீபன், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பாரதிதாசன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments