காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கு மேலும் 3 வெள்ளிப் பதக்கங்கள்..!

0 3756
காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கு மேலும் 3 வெள்ளிப் பதக்கங்கள்..!

இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் தொடரில், இந்தியா மேலும் 3 வெள்ளி உள்பட 5 பதக்கங்களை வென்றுள்ளது.

10 கிலோ மீட்டர் தூர நடை ஓட்ட போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப்பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் பந்தய தூரத்தை 43 நிமிடங்கள் 38 வினாடிகளில் கடந்து அவர் தங்கத்தை தவறவிட்டார்.

3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் எனப்படும் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் சேபிள், வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். லான் பவுல்ஸ் ஆண்கள் போட்டியில் இந்திய வீரர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

அதேபோல், மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் ஜெய்ஸ்மினும், 50 கிலோ பிரிவில் பூஜா கெலாட்டும் வெண்கலம் வென்றனர்.

காமன்வெல்த் தொடரில் இதுவரை 9 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments