பெண்களுக்கு இலவசம் தானே.. டிக்கெட் பரிசோதகரை சுற்றி வளைத்த பொதுமக்கள்.!

0 7323
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, பேருந்தில் மகளிருக்கான இலவச டிக்கெட்டை தவறவிட்ட பெண் பயணியிடம் 100 ரூபாய் அபராதம் கட்ட சொல்லி அதிகாரி வலியுறுத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, பேருந்தில் மகளிருக்கான இலவச டிக்கெட்டை தவறவிட்ட பெண் பயணியிடம் 100 ரூபாய் அபராதம் கட்ட சொல்லி அதிகாரி வலியுறுத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சென்ற அரசு பேருந்தை நிறுத்தி அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது பெண் பயணி ஒருவர், வழங்கப்பட்ட மகளிருக்கான இலவசம் என்ற பயணச்சீட்டை தவறவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் 100 ரூபாய் அபராதம் கட்ட அதிகாரிகள் கூறியதால் அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்ற நிலையில், டிக்கெட்டை தொலைத்ததற்காக அபராதம் கேட்பதா என மக்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments