திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பவித்ரோற்சவம்: நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு!

0 13512

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பவித்ரோற்சவத்திற்கான டிக்கெட் நாளை முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம் வருகிற ஆகஸ்ட் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இதற்கான டிக்கெட்டை தேவஸ்தான இணையதளத்தில் 2,500 ரூபாய் செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 4 நாட்களுக்கான 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்களை நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments