முகக் கவசம் அணியாததற்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரியை தாக்க முயன்ற நகைக் கடை உரிமையாளர்

0 1001
முகக் கவசம் அணியாததற்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரியை தாக்க முயன்ற நகைக் கடை உரிமையாளர்

சென்னையில் முகக் கவசம் அணியாததற்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரியை நகைக் கடை உரிமையாளர் தாக்க முயன்ற நிலையில், அவரது கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

மயிலாப்பூர் பகுதியில் ஆய்வு நடத்திய மாநகராட்சியினர், சந்தோஷ் குமார் என்பவரின் நகைக்கடையில் இருந்தவர்கள் முகக் கவசம் அணியாமல் இருந்ததால், அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

இதனை அடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்தோஷ்குமார், அதிகாரியின் சட்டையை பிடித்து தாக்க முயற்சித்தாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், நோய் பரவல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக்கூறி அவரது நகைக்கடைக்கு மாநகராட்சியினர் சீல் வைத்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments