இளைஞர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் - தம்பி கைது

0 2178

தூத்துக்குடியில் இளைஞர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவர் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.

டூவிபுரத்தை சேர்ந்த சாமுவேல் - அன்னலட்சுமி தம்பதியினருக்கு  2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.  இதில் மூத்த மகன் ஜீவன் ஜோஸ்வா தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று ஜீவன் ஜோஸ்வா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து விட்டதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்த து. போலீசார் ஜோஸ்வாவின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில்   பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜீவன் ஜோஸ்வா கழுத்தை நெறித்தும், வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றியும் கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தம்பி தவசுமணியை கைது செய்தனர். விசாரணையில் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்ததால் அண்ணனை கொலை செய்ததாக தவசுமணி தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments