லண்டனில் தனது பிறந்தநாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய எம்.எஸ்.தோனி..!

0 1760
லண்டனில் தனது பிறந்தநாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய எம்.எஸ்.தோனி..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் 41வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தற்போது லண்டன் சென்றுள்ள தோனி அங்கு தனது பிறந்தநாளை கொண்டாடிய காட்சிகளை அவரது மனைவி சாக்ஷி இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் தோனி கேக் வெட்டும் காட்சிகளும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

41ஆவது பிறந்த நாளை கொண்டாடும் எம்.எஸ்.தோனிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments